#Breaking: தமிழகத்தில் இன்று மேலும் 716 பேருக்கு கொரோனா.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழகத்தில் இன்று மேலும் 716 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் இன்று 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனாவால் 8002 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 8,718 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,882 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் இன்று 8 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து இன்று 83 பேர் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,134 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 2,66,687 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 11,788 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 716 பேருக்கு கொரோனா உறுதியானது. இன்று கொரோனா கண்டறியப்பட்ட 716 பேரில் ஆண்கள் 427 பேர், பெண்கள் 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, கொரோனா வார்டில் 6,520 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று சென்னைக்கு அடுத்தபடியாக அரியலூரில் 36, செங்கல்பட்டில் 35, பெரம்பலூர் மற்றும் திருவள்ளூரில் தலா 27 என கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 8,718 பேரில் 5,848 பேர் ஆண்களும், 2,867 பேர் பெண்களும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

28 minutes ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

60 minutes ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

1 hour ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

2 hours ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

3 hours ago

நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…

3 hours ago