அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் தொடர்பான விசாரணை நிறைவு.
கடந்த 2018-ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் 200 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக தமிழக உயர்கல்வித்துறைக்கு புகார்கள் அளிக்கப்பட்டது.
சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டை கலையரசன் தலைமையில் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெறாமல் இருந்த நிலையில், திங்கட்கிழமை முதல் இது தொடர்பான விசாரணை மீண்டும் தொடங்கியது. இதனையடுத்து, முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்கள் குறித்த விசாரணையை நீதிபதி கலையரசன் நிறைவு செய்துள்ளார். இதனை தொடர்ந்து, விரைவில், இந்த விசாரணை தொடர்பான அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…