உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் வைத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 38-வது அரசுத்தரப்பு சாட்சியாக இருக்கும் அனிஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இங்கு கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி, நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 10-வது நபராக சேர்க்கப்பட்டுள்ள ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையை தனிப்படை காவல்துறையினர் உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் வைத்து நடத்தி வருகின்றனர். ஷாஜியை பொறுத்தவரையில் அரசுத்தரப்பு வழக்கில் 36-வது சாட்சியாக இவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தற்போது, உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் வைத்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 38-வது அரசுத்தரப்பு சாட்சியாக இருக்கும் அனிஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அனிஷிடமும் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…
ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…