கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு.
இளையராஜா விவகாரத்தில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக உத்தரவு கடிதம் கிடைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் அறிக்கை தர உத்தரவிட்டது. இந்த நிலையில் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பட்டியலின சமூகம் குறித்து இழிவாக பேசியதாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தேசிய எஸ்சி, எஸ்டி ஆணையம் சென்னை காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளது.
சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. சில நாட்களாகவே இளையராஜா வெளியிட்ட கருத்திற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் எதிர் கருத்து தெரிவித்து கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த சமயத்தில் இருட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்பட பலர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது கி.வீரமணி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இளையராஜாவை கடுமையாக விமரித்ததாக கூறப்படுகிறது.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…