தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்கு உதவிடுமாறு கோரி பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால் மத்திய அரசு குறைந்த அளவே நிலக்கரி தருகிறது என்றும் சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், பிரதமருக்கு முதல்வர் இக்கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ‘ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி கிடைக்க நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார். 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவை உள்ள நிலையில் 50,000 மெட்ரிக் டன் நிலக்கரி மட்டுமே கிடைக்கிறது. தடையற்ற மின் வினியோகத்தை பராமரிக்க அதிக விலை தந்து நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.
நிலக்கரி எடுத்துச் செல்ல 22 ரேக்குகள் தேவைப்படும் நிலையில் 14 ரேக்குகள் மட்டுமே வழங்கப் படுகின்றன. 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்ய அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும், தமிழக உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத் தக்க அளவை எட்டியுள்ளது. 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்கினால் மட்டுமே தடையில்லா மின் வினியோகத்தை பராமரிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…