சென்னை:குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க துவங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 30 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்றும்,இன்னும் சற்று நேரத்தில் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கும் என்றும் முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால்,பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும்,வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டனர்.
இந்நிலையில்,குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்க துவங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
“காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியது.கடந்த 6 மணி நேரத்தில் இது 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த நிகழ்வு தொடரும்.
காற்றழுத்த மண்டலம் காரணமாக அதிக கனமழை இருக்காது,ஆனால் கனமழை தொடரும்.எனவே,சென்னைக்கு விடுக்கப்பட்ட அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் திரும்ப பெறப்படுகிறது”,என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்கத் தொடங்கியதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தரைக்காற்று பலமாக வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…
சென்னை : லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…