புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கிரண்பேடி வராததால் ஆளுநர் உரை நிறுத்திவைப்பு.
இன்று சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் நடைபெற இருந்தது. இந்த பட்ஜெட்டிற்கு கிரண்பேடி ஒப்புதல் வழங்காததால், புதுச்சேரி பட்ஜெட் விவகாரம் குறித்து துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு முதலமைச்சர் நாராயணசாமி கடிதம் எழுதினார். அதில், கொரோனா பாதிப்பு இருக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் ஜனநாயக முறைப்படி கட்டாயம். இந்திய அரசியல் சாசனத்தை பின்பற்றி ஆளுநர் உரையாற்றுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவை தொடங்க இருந்த கிரண்பேடி வராததால் 15 நிமிடங்கள் காத்திருந்த நிலையில், பின்னர் 09.45 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியது. இதையடுத்து, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆளுநர் உரை இன்றி பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தினார்.
அவர்கள் ஒப்புதல் அளித்ததும், ஆளுநர் உரை நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர், சிறிது நேரம் சிவக்கொழுந்து உரையாற்றிய நிலையில் அவையை 12.05 வரை ஒத்திவைத்தார். மேலும், குறிப்பிட்டபடி மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
புதுச்சேரியில் ஆளுநர் பங்கேற்காமல் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…