தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் இன்று 3,949 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 86,224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று 2,212 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 47,749 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 2,167 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது.
இதனால், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,141 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…