#BREAKING : தமிழகத்தில் இந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை – தமிழக அரசு

Published by
லீனா

இந்தி கற்றுக் கொள்ளாமல், தமிழகத்தில் இருந்து வெளியே செல்லும் மாணவர்கள் அங்கு மொழி தெரியாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, மும்மொழி கொள்கையை ஏன் தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் அர்ஜுன் இளையராஜா என்பவர் தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு விசாரித்தது.

அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தமிழக அரசு எடுக்க வேண்டிய முடிவுதான் என்றாலும், மாணவர்கள் ஒருமொழியை கூடுதலாக தெரிந்துகொள்வது நல்லது தான். தமிழகத்தை தவிர, வேறு 2 மாநிலங்கள் இந்த கொளகையை அமல்படுத்தியுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேபோல், இந்தி கற்றுக் கொள்ளாமல், தமிழகத்தில் இருந்து வெளியே செல்லும் மாணவர்கள் அங்கு மொழி தெரியாமல் சிரமப்படுவதை கருத்தில் கொண்டு, மும்மொழி கொள்கையை ஏன் அரசு அமல்படுத்தக்கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, தமிழகத்தில் இந்தியை கற்றுக் கொள்ள யாருக்கும் தடை விதிக்கப்படவில்லை. அதேசமயம், இருமொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று தான் தமிழக அரசு கொள்கை முடிவாக எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விரிவான பதில்மனுவை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, இந்த வழக்கை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

Recent Posts

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

31 minutes ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

2 hours ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

2 hours ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

3 hours ago

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

3 hours ago