பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.
சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பின் போது, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், அசோக்நகர் அனைத்து மகளீர் போலிஸார் அவரை கைது செய்து, ஆசிரியர் ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தினர். பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவர பின்னர் ராஜகோபாலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து,அவர் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்தது. தொடர்ந்து இவர் மீது புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தது. இந்நிலையில், அந்த புகாரின் உண்மைதன்மை குறித்து காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.
தற்போது , பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…