மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் மோசமான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை
மாணவிகளுக்கு பள்ளி ஆசிரியர் மோசமான குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணையை மேற்கொண்டுள்ளது. கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பு அதிகமாகி வரும் சூழலில் இதுபோன்ற சம்பவம் வருத்தமளிப்பதாகவும், மேலும், மூன்று நாட்களுக்குள் முழு அறிக்கையை தாக்கல் செய்ய டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.
சென்னையில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளியில், வணிகவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ராஜகோபால். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இணையத்தில் புகார்கள் எழுந்து வந்தது. இதனைத்தொடர்ந்து ஆசிரியர் ராஜகோபாலன் பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜகோபால் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் பல ஆண்டுகளாகவே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது இந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர், ராஜகோபாலனை ஜூன் 8-ம் தேதி வரை 14 நாட்கள் புழல் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…