நண்பகல் 12 மணிக்கு மேல் தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி இல்லை என்ற தட்டுப்பாடு ஏற்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது, பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தடுப்புசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி பற்றாக்குறை உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த தமிழர்களும் தயாராக இருக்கிறார்கள்.
கிராமபுறங்களில் உள்ளவர்கள் மட்டுமல்லாமல் மலைவாழ் கிராப்புறகளில் உள்ளவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயாராக உள்ளனர். ஆனால், தடுப்பூசி தான் இல்லை என்கின்ற நிலை உள்ளது. இதுவரை தமிழகத்திற்கு ஒரு கோடியே 44 லட்சத்து 39 ஆயிரத்து 940 தடுப்பூசிகள், இதுவரை நாம் செலுத்தியிருப்பது என்பது ஒரு கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 249 தடுப்பூசிகள். தற்போது கையில் இருப்பது 2 லட்சத்து 7 ஆயிரத்து 345 தடுப்பூசிகள் உள்ளது.
கையில் உள்ள இரண்டு லட்சம் தடுப்பூசியில் பாதி தற்போது முடிந்து இருக்கும். இதனால் நண்பகல்12 மணிக்கு மேல் தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி இல்லை என்ற தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவித்தார்.
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…