தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகபோராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ( 2018 ஆம் ஆண்டு மே 22-ம் தேதி ) போலீசார் நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். ஆனாலும் ஆலை செயல்படுவதற்கு எதிராக மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை வெளியிட்டது.
ஆனால் அந்த சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி வந்தார். துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தார். காயமடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் ஆறுதல் கூறினார் ரஜினிகாந்த். இதன் பின் செய்தியாளர் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறுகையில், தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுறுவியுள்ளனர் என்று கூறினார்.
இதற்குஇடையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வரும் 25ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் தர அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…
சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…