முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு, ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது, தடுப்பூசி பயன்பாடு குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பாக மீண்டும் ஒரு ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறைவாக உள்ள பகுதிகளில், அத்தியாவசிய கடைகள் மீண்டும் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், தொற்று அதிகமாக உள்ள இடங்களில் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், மூன்றாம் அலை வரும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் குறைவான மக்களே தடுப்பு ஊசி செலுத்தி உள்ளனர். எனவே அனைவரும் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை நடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல்கள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…