தமிழகத்தில் தீபாவளி, பொங்கல், போன்ற விடுமுறையின் போது பல்வேறு நகரங்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.அதிலும் சென்னையில் இருந்து அதிக மக்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். அந்த நேரங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அரசு போக்குவரத்துக்கழகம் வழக்கமாக இயங்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் 14-ம் தேதி முதல் 17-ம் தேதிவரை பொங்கல் வரை விடுமுறை கொடுக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து அரசு விரைவுப் பஸ்களில் 30 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி இன்றுமுதல் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கூட்ட நெரிசலைப் பொறுத்து பொங்கலுக்கு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி13-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்றும் , ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு நாளையும் செய்து கொள்ளலாம்.
சென்னை : அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் இப்பொழுது ரத்து…
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…