TNGovt [Image Source : FACEBOOK/ TAMIL NADU GOVERNMENT SERVANTS ASSOCIATION]
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை காவிரியில் உடனடியாக திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்த உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். அதன்படி, தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகவும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 38 டிஎம்சி தண்ணீரை உடனே திறக்க தமிழக அரசு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை 53 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 15 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து திறந்து விட்டன என குற்றசாட்டியுள்ளனர்.
இதனால் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் இருந்து தமிழக அரசின் அதிகாரிகள் குழு வெளிநடப்பு செய்தது. அரசின் கோரிக்கையை ஏற்காததால் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக சந்தீப் சக்சேனா கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு கடந்த 9-ம் தேதி வரை 37.9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பத்தூர் : ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கீழே தள்ளிய வழக்கில், குற்றவாளியான ஹேமராஜுக்கு…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (மதிமுக) ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலுக்கு தான் காரணம் இல்லை என்று மல்லை…
வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு…
லார்ட்ஸ் : லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 193 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து…
சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.…
கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும்…