9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

Published by
பால முருகன்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.

தென் தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் வடகடலோர மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் கோவை, நீலகிரி, சேலம், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது .

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை தென் மேற்கு கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கூறப்படுகிறது.

செப்டம்பர் 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய தேதிகளில் கேரளா லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகம் முதல் 50 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…

28 minutes ago

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

1 hour ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

2 hours ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

3 hours ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

3 hours ago