ஐஐடி வளாகம் உயிரியல் பூங்கா அல்ல என்றும், நாய்களை பராமரிப்பது ஐஐடி-யின் பணியில்லை.
சென்னை உயர்நீதிமன்றத்தில், கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு, சென்னை ஐஐடி வளாகத்தில் சுற்றி திரிய கூடிய கால்நடைகளை முறையாக கவனிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதி கேசவலு தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ஐஐடி வளாகத்தில் கடந்த 6 மாதங்களில் 49 நாய்கள் இறந்துள்ளன. நாய்கள் இறப்புக்குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
வீட்டில் பராமரிக்க முடியாதவர்கள் நாய்களை விட்டு செல்வதாகவும், நாய்களை முறையாக பராமரித்து வருவதாகவும் ஐஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது. கருத்துக்களை கேட்டறிந்த நீதிபதிகள், ஐஐடி வளாகம் உயிரியல் பூங்கா அல்ல என்றும், நாய்களை பராமரிப்பது ஐஐடி-யின் பணியில்லை என்றும் தெரிவித்துள்ளனர். நாய்களை பராமரிப்பு பகுதியாக ஐஐடி மாறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…