சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாமக்கல் மாவட்டத்தில் 14.44 கோடி ரூபாய் மதிப்பிலான 26 திட்டங்களை இன்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்து, 137.65 கோடி மதிப்பிலான 130 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், நாமக்கல் மாவட்டம் கொரோனா தடுப்பில் முன்னணி மாவட்டமாகத் திகழ்கிறது. கொரோனாவின் தாக்கமும் நாமக்கல்லில் கட்டுக்குள் உள்ளது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என தெரிவித்திருந்தார்.
நாமக்கல் மாவட்டம் அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் மாவட்டம் என்று சொன்னாலும் மிகை ஆகாது எனக் கூறிய அவர்,கல்வியில் சிறந்து விளங்க கூடிய மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் தான் திகழ்கிறது. இந்நிலையில், தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…