Mettur dam opening on June 12! [Image Source : Twitter/@sunnewstamil]
காவேரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தண்ணீர் திறந்து வைக்கிறார்.
அணையின் 90 ஆண்டுகால வரலாற்றில் குறிப்பாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது இது 12வது முறையாகும். இதன் மூலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கடந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக முன்கூட்டியே மே 24-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, இந்த மாதம் 12-ஆம் தேதி அதாவது இன்று திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
3 நாள் அரசு முறை பயணமாக சேலம் வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி, சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 16 அடி உயர வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…