மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

Published by
பால முருகன்

தமிழ்நாட்டுக்கு வந்து பயிற்சிகள் பெற மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு தமிழாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வழங்குவதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாடு அரசு எடுத்துவரும் விளையாட்டு மேம்பாட்டு முன்னெடுப்பு திட்டங்களால், தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று வருகின்றனர். விளையாட்டுப் போட்டிகளில் திறமைக்கு பெயர் பெற்ற மாநிலமான மணிப்பூரில் உள்ள தற்போதைய நிலையை தமிழ்நாடு மிகுந்த கவலையுடனும், வேதனையுடனும் பார்க்கிறது.

மணிப்பூர் எப்போதும் தேசிய மற்றும் சர்வதேச தரத்திலான சாம்பியன்களை, குறிப்பாக பெண் சாம்பியன்களை உருவாக்கி வந்துள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை அடுத்த ஆண்டு (2024) நடத்துவதற்கான மாநிலமாக தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.

மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால். அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பயிற்சிகள் பெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

இவ்விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் உயர்தர பயிற்சிகள் அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு வசதிகனை பயன்படுத்திக் கொள்ள அவர்களின் விவரங்களை அதாவது தங்கள் பெயர், முகவரி, அடையாளச் சான்று, தொடர்பு விவரங்கள், விளையாட்டு சாதனைகள் மற்றும் பயிற்சித் தேவைகள் போன்ற விவரங்களுடன் மின்னஞ்சல் (sportstn2023@gmail.com) முகவரியில் மற்றும் தொலைபேசி – எண். +91-8925903047 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்” என அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“இது வெஸ்ட் இண்டீஸ் போகாத”…ரோஹித் எச்சரிக்கையை மீறி சென்ற புஜாராவுக்கு நடந்த மர்ம சம்பவம்?

சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு…

23 minutes ago

அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் வரும்..இபிஎஸ் பேச்சு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.…

46 minutes ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான…

1 hour ago

மஸ்க் உடனான உறவை நீட்டிக்க விருப்பம் இல்லை – ட்ரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல்…

2 hours ago

பெங்களூர் கூட்ட நெரிசல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம்!

பெங்களூர் : ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த…

2 hours ago

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

15 hours ago