உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்

Published by
Venu

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  முதலமைச்சர்  பழனிசாமி  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர், 26.8.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள் தலைசிறந்த வழக்கறிஞர். இவர் தனது திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி கண்ட பெருமைக்குரியவர். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், கேரள உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் திறம்பட பணியாற்றியவர். பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் என்ற பெருமைக்குரியவர். குறிப்பாக பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை விதித்து தீர்ப்பளித்தார்.சென்னை பார் கவுன்சில் செயலாளராகவும், தேசிய சட்ட ஆணையத்தின் தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர். உச்ச நீதிமன்றத்தால் முல்லை பெரியாறு ஆய்வுக்குழுவில் நியமிக்கப்பட்டவர்.

 நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்கள், தனது கடின உழைப்பாலும், திறமையான வாதத்தாலும், நீதித்துறையில் தனி முத்திரை பதித்தவர். இவர் பல நூல்களையும் எழுதிய பெருமைக்குரியவர். அன்னாரின் மறைவு தமிழ்நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பேரிழப்பாகும் நீதியரசர் திரு. ஏ.ஆர் லட்சுமணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் நீதித்துறையினருக்கும்  எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளர்.

Published by
Venu

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

7 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago