மளமளவென்று ஊழல் செய்யும் முதல்வர் பழனிசாமி – தமிழகம் மீட்போம் கூட்டத்தில் மு.க ஸ்டாலின் பேச்சு

Published by
பாலா கலியமூர்த்தி

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழகம் மீட்போம் என்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில், முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசிய முக ஸ்டாலின்.

தமிழகத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்காக அனைத்து கட்சிகளும் ஆயுத்தமாகி வருகிறது. இந்த நிலையில், ராமநாதபுரத்தில் தமிழகம் மீட்போம் என்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ராமநாதபுரத்துக்கு வரும் ஆண்டுகளில் கொண்டு வரப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து இப்போதே ஆராயத் தொடங்கி விட்டது திமுக.

எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஆனவர் அல்ல. மறுபடியும் தனக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்பதும் அவருக்கு தெரியும். அதனால் தான் இருக்கும் சில மாதங்களிலும் கிடைத்ததை சுருட்டி கொண்டு ஓடும் மனநிலையில் மளமளவென்று ஊழல் செய்து குவித்து கொண்டிருக்கிறார். 4 ஆண்டுகள் சிறை, ரூ.100 கோடி அபராதம் என்பதே ஜெயலலிதாவின் ஆட்சி.

தன்னை மகா யோக்கியன், விவசாயி என்று காட்டிக் கொள்ளும் எடப்பாடி, கொள்ளையடிப்பது எப்படி என புத்தகம் எழுதுவதற்கு தகுதியான ஆள். எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சியை அடமானம் வைத்தார். ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட கட்சியை குத்தகைக்கு விட்டார். அ.தி.மு.க.வை பா.ஜ.க.வுக்கு குத்தகைக்கு விட்ட பிறகு எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கும், ஜெயலலிதா நினைவிடத்துக்கும் போய் உங்களால் எப்படி மலர் வளையம் வைக்க முடிகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியிடம் நான் ஓரு கோரிக்கை வைக்கிறேன், போராடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பழனிசாமியை அனுப்புங்கள், அந்தளவுக்கு வேளாண் சட்டங்களை கரைத்து குடித்தவர் பழனிசாமி. தமிழகத்தில் அடுத்து அமையப்போவது தி.மு.க.வின் ஆட்சி தான் என்று முக ஸ்டாலின் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வானத்தில் குலுங்கிய விமானம்.. அனுமதி கேட்ட இந்தியா.. அனுமதி மறுத்த பாகிஸ்தான்! – திடுக்கிடும் தகவல்

வானத்தில் குலுங்கிய விமானம்.. அனுமதி கேட்ட இந்தியா.. அனுமதி மறுத்த பாகிஸ்தான்! – திடுக்கிடும் தகவல்

டெல்லி : கடந்த 21-ம் தேதி டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு 220 பேருடன் புறப்பட்ட 6E 2142 இண்டிகோ விமானம்…

26 minutes ago

மழையோ மழை: 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.., 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்.!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த இரண்டு தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது.   இதனிடையே, அரபிக்கடலில் நிலவி வரும் குறைந்த…

57 minutes ago

டெல்லியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.., திமுகவினர் உற்சாக வரவேற்பு!

டெல்லி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை (மே 24, 2025) நடைபெறவுள்ள நிதி…

60 minutes ago

“தண்ணீரை நிறுத்தினால் உங்கள் மூச்சை நிறுத்துவோம்” இந்தியாவுக்கு எச்சரிக்கை விட்ட பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்!

இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…

4 hours ago

போர் நிறுத்தம் அமெரிக்காவுக்கு தொடர்பு இல்லை..மீண்டும் விளக்கம் கொடுத்த அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…

8 hours ago

நீங்க இல்லைனா என்ன நான் இருக்கேன்…சர்ச்சை கொண்டாட்டத்தை செய்த ஆகாஷ் சிங்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…

9 hours ago