mkstalin [Imagesource : Representative]
நாளை மறுநாள் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின், நாளை பீகார் செல்கிறார்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு மத்தியில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைமையிலான அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இந்த ஆலோசனை கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இந்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் இந்த கூட்டமானது வரும் வெள்ளிக்கிழமை பாட்னாவில் நடைபெறுகிறது. மேலும், இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
நேற்று திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அந்த விழாவில் பேசுகையில், பீகார் தலைநகர் பாட்னாவில் ஜூன் 23ல் நடைபெறும் ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கேற்கிறேன் என்று தெரிவித்தார். அதன்படி, அந்த கூட்டத்தில் பங்கேற்க நாளை பீகார் செல்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
இதற்கிடையில், எதிர்கட்சிகளை திரட்டும் விதமாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பல்வேறு தலைவர்களை சந்தித்து வந்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சரத் பவார், உத்தவ் தாக்கரே, நவீன் பட்நாயக், கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…