கோவை தெற்கு யாருக்கு..? மிகப்பெரிய போட்டியாக மாறிய தொகுதி.!

Published by
murugan

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு, மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போயிடுகிறது. போட்டியிடும் 20 வேட்பாளர்களில் 17 வேட்பாளர்களின் பட்டியலை  பாஜக வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 3 வேட்பாளர்களின் பட்டியல் பாஜக விரைவில் வெளியிடம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு வானதி சீனிவாசனுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கே வாய்ப்பு கிடைத்த்துள்ளது. இந்நிலையில், வருகின்ற சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி கடுமையான போட்டி நிலவும் தொகுதியாக மாறியுள்ளது. காரணம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசனும், காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமாரும், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் போட்டியிட உள்ளனர்.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பாக அம்மன் கே. அர்ஜுனன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் அதிமுக, திமுக நேரடியாக போட்டியிடவில்லை அதற்க்கு பதிலாக தங்களது கூட்டணி கட்சிகளுக்கே வாய்ப்பு அளித்துள்ளனர். கமல்ஹாசன் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மயய்ம் கட்சி தனித்து அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமக, ஐஜேகே கட்சிகளை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது.

கமல்ஹாசன் எங்கு போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியை தேர்வு செய்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வாங்கிய ஒட்டு அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் திரும்பி பார்க்க வைத்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 1.5 வாக்குகளை பெற்றது.

இதன் காரணமாகவே மக்கள் நீதி மயய்ம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியை தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தேசிய காட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றால் இதனால் கிடைக்கும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே இந்த தொகுதியை தேர்வு செய்துள்ளார்.

காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் அரசியல்வாதியான மயூரா ஜெயக்குமார், மயூரா ரேடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவு அங்கு உள்ளது.

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கில் சற்று செல்வாக்கு பெற்றவர். வரும் தேர்தலில் வானதி சீனிவாசன் எளிதாக வென்றுவிடுவார் என்று நினைத்திருந்த நிலையில் கமல்ஹாசன் போட்டியிடுவதாக அறிவித்ததால், கோவை தெற்கு தொகுதி  மிகப்பெரிய போட்டி தொகுதியாக மாறியுள்ளது.

Published by
murugan

Recent Posts

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…

22 minutes ago

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…

1 hour ago

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…

2 hours ago

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…

3 hours ago

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை…

3 hours ago