பால் மணம் மாறா பிஞ்சுகளுக்கு வாழ்வு கொடுத்த சிவகங்கை ஆட்சியர்… மனிதநேயமிக்க எம்.எல்.ஏ மற்றும் சமுக ஆர்வலர்கள்…

Published by
Kaliraj

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த  மானாமதுரை மாரி (28) என்பவர்  அப்பகுதியில் கூலி வேலை செய்து வருபவர்.  இவருக்கு திவ்யா (22) என்ற பெண்ணுடன் திருமணமாகி கடந்த டிசம்பரில் சிவகங்கை அரசு மருத்துவமனையில் இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நாட்களிலேயே ஒரு குழந்தை இறந்துவிட்டது. மற்றொரு குழந்தையுடன் வீடு திரும்பிய பெற்றோர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.அந்த  பெண் குழந்தைக்கு மலம் தொப்புள் வழியே வெளியேறியதால் மறுபடியும் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தனியார் மருத்துவமனையில் அந்த் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும் பயனில்லாத நிலையில் மேலும் இரண்டு லட்ச ரூபாய் வரை செலவாகும் என தெரிவித்துள்ளனர், தினசரி  கூலி வேலை செய்யும் மாரி வேறு வழியின்றி குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார். இந்தத் தகவல் சமூக வலைதளத்தில் காட்டுத்தீயாக  பரவியது. இதைதையடுத்து இந்த செய்தி சிவகங்கை  மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கவனத்திற்குக் கொண்டு சென்ற நிலையில், குழந்தையை முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

பிறந்த குழந்தைக்கு தொப்புள் வழியே ...

மேலும் மானாமதுரை தொகுதி அதிமுக எம்எல்ஏ நாகராஜன், சமூக ஆர்வலர்கள் பாலசுப்ரமணியன், சங்கரசுப்ரமணியன் உள்ளிட்டோர் உதவியதன் பேரில் இன்று மதுரை தனியார் மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு அந்தக் குழந்தையும் பெற்றோரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.  மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பலரும் உதவியதன் மூலம்  குழந்தைக்கு விரைவில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதேபோல், கடந்த சில நாட்களுக்கு  முன் மானாமதுரை அழகர்கோயில் தெருவைச் சேர்ந்த பிறந்த 10 நாள் ஆன குழந்தைக்கு முதுகில் ஏற்பட்ட கட்டியை அகற்ற முடியாமல் தவித்த பெற்றோர்க்கு மதுரை தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து உதவிய  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தற்போது இந்தக் குழந்தைக்கும் உதவி உள்ளார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

13 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

44 minutes ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

9 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

11 hours ago