ரூ.3,233 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தம்… 5,000-க்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு! முழு விவரம் உள்ளே..

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ்நாடு தொழில்துறையில் முதலிடம் பிடிப்பதே அரசின் எண்ணம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டி.

சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்தார். சென்னையில் இருந்து கடந்த 23ம் தேதி சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர், தனது இரண்டு நாள் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு, பின்னர் ஜப்பானில் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த சமயத்தில், 9 நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பானியில் இருந்து நேற்று இரவு சென்னை திரும்பினார் முதலமைச்சர். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், உற்பத்தி துறையில் முன்னோடியாக விளங்குகிறது ஜப்பான்.

அதே நேரத்தில் ஆசியாவில் மிகப்பெரிய உற்பத்தி தொழில் மையமாக தமிழ்நாடு உருவெடுக்க வேண்டும் என்பது தான் திமுகவின் குறிக்கோள். இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டேன். தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்கும் இடையேயான பொருளாதாரம் மேம்பாடு அடையும் வகையில் பயணம் அமைந்தது.

சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் அந்நாட்டு அமைச்சர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்துத்துள்ளேன். தமிழகத்தில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அவர்களை அழைத்துள்ளேன். பல்வேறு ஆலோசனையில் தமிழ்நாட்டுக்கு ரூ.3,000 கோடி முதலீடு ஈர்க்க திட்டமிட்டோம், ஆனால், ரூ.3,233கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

அதாவது, முந்தைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், இன்றைய தொழில்துறை அமைச்சராக இருக்கக்கூடிய டி.ஆர்.பி. ராஜா அவர்களும் தொழில்துறை அலுவலர்களும் முனைப்போடு செயல்பட்டு. பல ஜப்பான் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி, அதில் முக்கிய திட்டமாகிய, 1,891 கோடி ரூபாய் முதலீட்டில் குளிர்சாதன கருவிகள் உற்பத்தி செய்வதற்கான புதிய தொழிற்சாலையை மிட்சுபிஷி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே சென்னையில் என் முன்பு கையெழுத்திடப்பட்டது.

அதையொட்டி, தற்போது ஹை-பி நிறுவனம் – 312 கோடி ரூபாய், டைசெல் நிறுவனம் – 83 கோடி ரூபாய், கியோகுட்டோ நிறுவனம் – 113.9 கோடி ரூபாய், மிட்சுபா இந்தியா – 155 கோடி ரூபாய், பாலிஹோஸ் டோஃபில் – 150 கோடி ரூபாய், பாலிஹோஸ் கோஹ்யேய் – 200 கோடி ரூபாய், பாலிஹோஸ் சட்டோ-ஷோஜி – 200 கோடி ரூபாய், ஓம்ரான் ஹெல்த்கேர் – 128 கோடி ரூபாய் என மொத்தம் 3,233 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

இதன் மூலமாக, நேரடியாகவும் மறைமுகமாகவும் 5000-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு நான் உங்களிடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவை மட்டுமல்லாமல், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டிற்கும் தொழிற்கல்வி வளர்ச்சிக்கும், உயர்கல்வித்திறன் பயிற்சிக்கும் தேவையனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளுடைய பல முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஓப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

மேலும் வருகிற 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவிருக்கக்கூடிய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கும் நீங்களெல்லாம் கலந்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு நான் அழைப்பு விடுத்திருக்கிறேன். இந்த அழைப்பினை ஏற்று பெரும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் அதில் கலந்து கொள்வதாக உறுதி தந்திருக்கிறார்கள். இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு சிறப்பாக நடத்த இருக்கிறது எனவும் முதல்வர் கூறினார்.

தமிழ்நாடு தொழில்துறையில் முதலிடம் பிடிப்பதே அரசின் எண்ணமாக உள்ளது. சிங்கப்பூர், ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளன. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்ட மிகப்பெரிய திட்டங்கள் என கூறினால் மெட்ரோ, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் என கூறலாம். இந்த திட்டங்களில் ஜப்பானின் பங்கு உள்ளது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி… 20ஆம் தேதி வரை வெளுத்து வாங்கும் கனமழை.!

சென்னை : அரபிக்கடலில் வரும் 22-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு…

8 minutes ago

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

2 hours ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

3 hours ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

4 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

4 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

6 hours ago