தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,549 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,157 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 82,128 ஆக அதிகரித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தொடர்ந்து 16 ஆம் நாளாக கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 60-ஐ கடந்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 25 பேரும், அரசு மருத்துவமனையில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 63 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 6 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.46 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இன்று உயிரிழந்தோரில் அதிகபட்சமாக, சென்னையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 176 பெரும், திருவள்ளூரில் 141 பெரும், மதுரையில் 134 பேர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 47 ஆம் நாளாக தொடர்ந்து இரட்டை இலக்கை எட்டியுள்ளது. மேலும், சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 895 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மற்ற மாவட்டங்களில் கொரோனவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…