கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கி வரும் நிலையில் இந்நோய் பரவாமல் தடுக்க பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தனிகவனம் செலுத்தி ஈடுபட்டு உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் சென்னை உள் பட தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்களில் தற்போது கூட்டம் குறைய தொடங்கி உள்ளது. எப்போதும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். ஆனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சென்னையில் உள்ள பெரும்பாலான வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடவில்லை. தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை தியாகராயர் நகர் ரெங்கநாதன் தெருவிலும் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. கொரோனோ எதிரொளியாக தமிழ்நாடு முழுவதும் இந்நிலையே நிலவுகிறது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…