முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்,பொது மக்களின் நலன் கருதி கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்கும் என்று சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில்,
கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்:
அதன்படி,பொதுமக்களின் சிகிச்சை கட்டணம் முழுதும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசே செலுத்தி விடும்.
மேலும்,மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இல்லாதவர்களுக்கு,தீவிரமல்லாத கொரோனா சிகிச்சைக்கு,A1 & A2 போன்ற உயர்தர மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் உதவி இல்லாமல்,ரூ.7500 மற்றும் A3 to A6 மருத்துவமனைகளில் ரூ.5000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே,தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் பெற்றால்,பொதுமக்கள் 1800 425 3993 / 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் 24 X 7 புகார்களை அளிக்கலாம்.
அவ்வாறு,புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தமிழக அரசால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…