Counseling for engineering courses begins on August 2!(Representational image)
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.2-ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கி அக்டோபர் 3ம் தேதி நிறைவு பெறுவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வுக்கான உத்தேச தேதி பட்டியலை வெளியிட்டது தொழில்நுட்ப கல்வி இயக்ககம்.
பொறியியல் கலந்தாய்வுக்கான உத்தேச தேதி பட்டியலில், முதலில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2ம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொது பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 7ம் தேதி முதல் செப்டம்பர் 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ரேண்டம் எண் ஜூன் 7-ல் வெளியாகும் நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் 30 வரை நடக்கிறது.
மேலும், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 12-ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, பி.இ., பி.டெக் மற்றும் பி.ஆர்க் பொறியியல் படிப்புகளுக்கு நாளை முதல் ஜூன் 6ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, https://www.tneaonline.org or https://www.tndte.gov.in என்ற இணையதள வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…