R. Sakkarapani [source: Fileimage]
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து தலா 3 லட்சம் நிவாரணம் வழங்கி இருந்தார். இந்த நிலையில், இந்த வெடிவிபத்திற்கு காரணம் சிலிண்டர் வெடித்தது தான் காரணம் என அமைச்சர் ஆர்.சக்கரபாணி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.
இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ஆர்.சக்கரபாணி ” கிருஷ்ணகிரி பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கு காரணம் உணவகத்தில் உள்ள சிலிண்டர் கசிந்துள்ளது தான். இதன் காரணமாக தான் இந்த வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
தடயவியல் துறையினர் சிலிண்டர் கசிந்ததன் காரணமாக தான் விபத்துக்கு காரணம் என அறிக்கை வழங்கி உள்ளனர். எனவே, அந்த அடிப்படையில் இந்த விபத்து ஏற்பட்டு இருந்தாலும், இந்த வெடி விபத்து எதிர்பாராத விதத்தில் நடந்த ஒரு விபத்து. மாவட்ட நிர்வாகத்திடம் “இந்த மாவட்டத்தில் எத்தனை பேர் பட்டாசு கடை லைசன்ஸ் வாங்கி வைத்திருக்கிறார்கள் என அவர்கள் அனைவரையும் அழைத்து கூட்டம் நடத்தி அவர்கள் எங்கு எல்லாம் பட்டாசு குடோன் வைத்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க நாங்கள் சொல்லியிருக்கிறோம்.
வரும் காலத்தில் இப்படி ஒரு விபத்து நடக்காமல் இருப்பதற்கு கண்டிப்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்பதை நான் தெரிவித்து கொள்கிறேன்” என அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும், இந்த பட்டாசு விபத்தில் காயமடைந்த 9 பேருக்கு தலா 50 ஆயிரமும், தீவிர சிகிச்சையில் உள்ள 2 பேருக்கு தலா 1 லட்சமும் நிவாரணமாக ஆர்.சக்கரபாணி வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது.
சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி…
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியில் நேற்று (ஜூலை 18) மாலை இரண்டு பள்ளி வாகனங்கள் நேருக்கு…
சென்னை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, வயது மூப்பின் காரணமாக சென்னையில்…
அங்காரா: இஸ்ரேல் - சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் அறிவித்துள்ளார்.…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77),…