சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லியிலும் சென்னையிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவக் குழுவிற்கும் இடையிலான மோதல்களால், உயிரிழப்புகள் மற்றும் மக்கள் அதிகமாக வசிக்கும் பொது இடங்களுக்கு சேதம் ஏற்பட்டது. அதிலும், சூடானின் தலைநகரான கார்டூம் நகரின் வடக்கே அமைந்துள்ள பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளது, அங்கு ஏற்பட்ட வான்வழி தாக்குதலால் பல வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட பல முக்கிய சேவைகள் இடிந்து விழுந்துள்ளது.
சூடான் தாக்குதல்
முன்னதாக சூடானில் உள்நாட்டுப் போர் காரணமாக நிலவிவரும் சிக்கலான நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 400 பேர் உட்பட்ட இந்திய குடிமக்களை அழைத்து வரும் “ஆபரேஷன் காவேரி” மீட்புப் பணிக்கு தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிடத் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லியிலும் சென்னையிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்ல கட்டுப்பாட்டு அறைக்கு 011-24193100, 9289516711, tnhouse@nic.in-ல் அழைக்கலாம். சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 9600023645,nrtchennai@gmail.com-யை தொடர்பு கொள்ளலாம்.
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகத்தையே சோகத்தில்…