விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாத இறுதியில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனையை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேற்கொண்டார். அப்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர், தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்திற்கும் கொரோனா உறுதியானது அடுத்து அவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார்கள்.பின்னர் கடந்த 6 ஆம் தேதி விஜயகாந்த் இரண்டம் கட்ட பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஜயகாந்த் அவர்கள் , மருத்துவக்குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம் ,அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றமடைந்ததையடுத்து, அவர் இன்று, சென்னை மியாட் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யபட்டார்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…