2021- ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு வரும் ஜனவரி மாதம் 31 ஆம் தேதி வரை ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழகஅரசு நேற்று அறிவித்திருந்தது. அதேசமயம் கொரோனா நோய்க்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தளர்வுகளும் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தது. இதனிடையே, தமிழகத்தில் நேற்று முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்களை அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2021- ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை ரூ.48.75 கோடி, கோவை 28.40 கோடி, திருச்சி ரூ.28.10 கோடி, மதுரை ரூ.27.30 கோடி, சேலம் ரூ.26.49 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ரூ.159 கோடினா? இன்று எவ்வளவு இருக்கும் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…