OPS Said that Nomination filed on Monday [file image]
OPS: இறுதி தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும், அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து பிரதான கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட பணிகளை நிறைவு செய்து தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
அதன்படி, திமுக, அதிமுக, பாஜக கூட்டணி பங்கீடுகள் நிறைவடைந்துவிட்டன. இதில், குறிப்பாக பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் தாமரை சின்னத்தில் 4 இடங்களில் போட்டியிடுவதாகவும் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். மேலும், பாஜக கூட்டணியில் பாமக 10, தமிழ் மாநில காங்கிரஸ் 3, அமமுக 2, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு அவரே விரைவில் அறிவிப்பார் எனவும் அண்ணாமலை கூறியிருந்தார். இதனால் வரும் மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடவில்லை என தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில், பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளோம் என்றும் சுயேட்சை சின்னத்தில் தான் போட்டி எனவும் அறிவித்த ஓபிஎஸ், இரட்டை இலை சின்னத்தை பெற சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இறுதி தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும், அடுத்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என திட்டவட்டமாக கூறிய ஓபிஎஸ், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன். எங்களின் தேர்தல் அறிக்கையை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் குறிப்பிட்டார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…