[Representative Image]
மெட்ரோ பணிகள் காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதியில்லை.
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் சாலை வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல தற்போது மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழித்தடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் இன்னும் ஒரு வருடத்திற்கு மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது
சென்னை கலங்கரை விளக்கம் முதல் காந்தி சிலை வரையிலான சர்வீஸ் சாலையில் மட்டும், வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் ஒலி மாசு அதிகரித்து வருவதன் காரணமாக சென்னை பிரதான சாலையில் உள்ள சிக்னல்களில் ஒலித்து வந்த பாடல்கள் தற்போது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பாடல்களை ஒலிபரப்ப வேண்டாம் என்று காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை போக்குவரத்து ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளார். விபத்து ஏற்படுவதை தவிர்க்கவும், போக்குவரத்து போலீசார் பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…