8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களின் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் – சென்னை இடையே ரூ.10,000 கோடி செலவில் 277 கி.மீ தொலைவிற்கு 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சாலை அமைக்கப்பட்டால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலம், காடுகள், நீர் நிலைகள் பாதிக்கும் என கூறி இந்த திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்பொழுது நிலம் கையகப்படுத்த தடை விதித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து 8 வழிச்சாலை திட்ட செயல் இயக்குனர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்தநிலையில், சேலம் – சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களின் குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கையாக 500-க்கும் மேற்பட்ட போலீசார், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…