நாளை முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ- பாஸ்.

Published by
Venu

நாளை முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ- பாஸ்  வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், மக்கள் மாவட்டம் விட்டு வேறு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால், கண்டிப்பாக இ-பாஸ் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் முக்கிய காரணங்களுக்கு வெளி மாவட்டங்களுக்கு செல்ல சிலர் விண்ணப்பித்தும் சில காரணங்களால் அது நிராகரிப்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும்  இ-பாஸ் முறைக்கேடும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது என்று புகார் எழுந்து வருகிறது.

இதனிடையே  விண்ணப்பித்த அனைவருக்கும் இ- பாஸ்  வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார் .இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,மாண்புமிகுஅம்மாவின் அரசு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய்த் தொற்றின் போது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்கள்ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், E-Pass அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று  தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

விண்ணில் சீறிப் பாய்ந்தது ‘ஃபால்கன் 9 ராக்கெட்’.., 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் இந்தியர்..!

விண்ணில் சீறிப் பாய்ந்தது ‘ஃபால்கன் 9 ராக்கெட்’.., 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளியில் இந்தியர்..!

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…

1 hour ago

நடிகர் கிருஷ்ணா தலைமறைவு? கைது செய்ய 5 தனிப்படைகள் அமைப்பு.!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

1 hour ago

சற்று நேரத்தில் விண்வெளி பயணம்.., டிராகன் விண்கலனின் தொலைதொடர்பு சோதனை நிறைவு – ஸ்பேஸ் எக்ஸ்!

அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…

2 hours ago

பெரியார் – அண்ணா குறித்து விமர்சனம் – இந்து முன்னணிக்கு ஓ.பி.எஸ். கண்டனம்.!

சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…

4 hours ago

திருப்பூரில் பரபரப்பு: இந்து முன்னணி பிரமுகர் நடுரோட்டில் வெட்டிக்கொலை.!

திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…

4 hours ago

“சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் உள்ளது” – நடிகர் விஜய் ஆண்டனி பளிச்.!

சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…

4 hours ago