நாட்டுக்கே முன்னோடியான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி, நம்மைக் காக்கும் 48 திட்டப்பயனாளிகளுடன் கலந்துரையாடினேன். கல்வியும் மருத்துவமும் நம் இரு கண்கள் என முதல்வர் ட்வீட்.
செங்கல்பட்டு சித்தாலப்பாக்கத்தில் மூதாட்டி பாஞ்சாலி வீட்டுக்கு சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 50 லட்சமாவது பயனாளிக்கு மருந்து பெட்டகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
நீரிழிவு, பிசியோதெரபி உட்பட 5 வகை நோய்களுக்கான மருந்து பெட்டகத்தை முதல்வர் வழங்கினார். இதைத்தொடர்ந்து, நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 188 ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாட்டுக்கே முன்னோடியான மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 50 லட்சமாவது பயனாளிக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கி, நம்மைக் காக்கும் 48 திட்டப்பயனாளிகளுடன் கலந்துரையாடினேன். 188 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையைத் தொடங்கி வைத்தேன். கல்வியும் மருத்துவமும் நம் இரு கண்கள்!’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…