செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு – சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

Published by
பாலா கலியமூர்த்தி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, செந்தில் பாலாஜி மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆக.28ம் தேதி விசாரணைக்கு வரும் எனவும் முதன்மை அமர்வு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னை எம்பி, எம்பிக்கள் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில், சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. விசாரணையின்போது செந்தில் பாலாஜி எந்த விளக்கமோ, பதிலோ அளிக்கவில்லை. செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோருடன் சேர்ந்து கிரிமினல் சதியில் ஈடுபட்டார்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கூட்டுச்சதி நடைபெற்று உள்ளதாகவும் கூறியுள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி ஆகியோர் கணக்கில் பெரும் தொகை டெபாசிட் ஆகியுள்ளது. மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த 3 வழக்குகள் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும் விசாரணை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

5 hours ago