கோவையில் காந்திபுரத்தில், உணவகத்தில் கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து பணியிடை நீக்கம்
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள், கடந்த 10- ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில்,கடந்த ஞாயிற்று கிழமை கோவையில் காந்திபுரத்தில், உணவகத்தில் அமர்ந்து சிலர் இரவு 10.20 மணிக்கு உணவருந்தியுள்ளனர். அங்கு வந்த காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து உணவு அருந்திக்கொண்டிருந்த பெண் உட்பட கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது காவல்துறையினர் அவர் கடுமையாக தாக்கினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.இதனை கண்ட பலர் காவல் அதிகாரியின் இந்த அநாகரீகமான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து உணவக உரிமையாளர் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு நேரங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை உணவகங்கள் செயல்பாடு அரசு அனுமதித்துள்ளது.இந்நிலையில் இரவு 10 மணிக்கு வந்து கடை அடைக்கும் படி உணவு அருந்திக்கொண்டிருந்த பெண் உட்பட கடை ஊழியர்கள், பொதுமக்கள் மீது என்று கடுமையாக தாக்கினார் என்று புகார் அளித்திருந்தார்.
இதனையடுத்து தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் முத்துவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.அதன் தொடர்ச்சியாக தற்பொழுது ,எஸ்ஐ முத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்த கொடூரமான தாக்குதலுக்கு விளக்கம் கேட்டு மாநில மனித உரிமை ஆணையம் கோவை காவல் ஆணையருக்கு விளக்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…