விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் , ல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக (Covid Care Centre) செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து, ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் / தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உயர்கல்வித்துரை அமைச்சர் பொன்முடி அவர்கள், ‘கல்லூரிகள் பிப்ரவரி 1-ல் திறந்தாலும், ஏற்கனவே அறிவித்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும். கல்லூரி மாணவர்களுக்கு 1,3,5-வது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் தான் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், செய்முறை தேர்வுகளுக்காக மாணவர்கள் நலன் கருதி பிப்ரவரி 1-ல் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஆன்லைன் தேர்வு நடக்காத நாட்களில் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…