Omron Healthcare Company [Image Source : Twitter/@TNDIPRNEWS]
தமிழ்நாட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கிறது ஒம்ரான் நிறுவனம்.
ஜப்பானின் முன்னணி நிறுவனமான ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. டோக்கியோவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒம்ரான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்துக்கும், ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் ரூ.128 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைக்கிறது ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம்.
தமிழ்நாட்டில் ரூ.128 கோடியில் தானியங்கி ரத்த அழுத்த மானிட்டர்களுக்கான உற்பத்தி ஆலையை நிறுவுகிறது ஒம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம். ஒம்ரான் நிறுவனம், தொழிற்சாலை ஆட்டோமேஷன், ஹெல்த்கேர், மின்னணு பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்கிறது ஒம்ரான் நிறுவனம்.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…