பொள்ளாச்சி வழக்கில் யார் தவறு செய்தலும் அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழகத்தையே உருக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வழக்கு ஆகும்.இந்த வழக்கு தொடரபாக முதலில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த வழக்கு தொடர்ப்பன விசாரணைகளை சிபிஐ மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக 2 ஆண்டுகளுக்குப் பிறகு பொள்ளாச்சி நகர அ.தி.மு.க. மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹெரென் பால், பாபு ஆகிய மூவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.பின்னர் கைதான அதிமுக பிரமுகர் உள்பட 3 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் உத்தரவு கோவை மகிளா நீதிமன்றம் பிறப்பித்தது.மேலும் அதிமுகவை சேர்ந்த அருளானந்தம் என்பவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுவதாக அறிவிக்க்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகும் தகவல் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடன் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் ,வழக்கினை சிபிஐ விசாரித்து வருதாகவும் ,யார் தவறு செய்தலும் அவர்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்.மேலும் சிபிஐ விசாரணையில் தலையிட விருப்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…