வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் இன்றி கொடியேற்றம்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்து உள்ளது. இந்த ஆலயத்திற்கு அனைத்து மதத்தினரும் எந்த வேறுபாடும் இன்றி சென்று வருவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு.
இந்த ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மத்திய-மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி தேவாலயத்தில் கூட்டம் கூடி பிரார்த்தனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனவே வேளாங்கண்ணி பேராலயத்தில் கொடியேற்றம் பக்தர்கள் இல்லாமல் நடைபெறுகிறது.
இதுகுறித்து பேராலய அதிபர் பிரபாகர் அவர்கள் கூறுகையில், நாளை 29-ந் தேதி மாலை 5 மணிக்கு பக்தர்கள் இல்லாமல் அன்னையின் கொடியினை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைக்கிறார் என்றும், பின்னர் ஆலய வளாகத்தில் கொடி, ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெறுகிறது. என்றும் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…