TNGovt [Image Source : FACEBOOK/ TAMIL NADU GOVERNMENT SERVANTS ASSOCIATION]
தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இணைக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவருக்கு ஆணையிட்டுள்ளது.
காலி மனையை ஜியோ கோ – ஆர்டினேட்ஸோடு புகைப்படம் எடுத்து ஆவணமாக இணைக்க வேண்டும் என கடந்த வாரம் அறிவுரை வழங்கப்பட்டது. சொத்தின் பக்கத்தில் இருக்கும் காலி இடத்தை புகைப்படம் எடுத்து ஆவணமாக சேர்த்து மோசடி செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இனி பத்திரப்பதிவில் சொத்தின் புகைபடத்தையும் இணைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதியப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் இருப்பதை மறைத்து காலி நிலம் என பதியப்படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும் எனவும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…