ஆளுநர் பொய் சொல்வதையே தொழிலாக கொண்டுள்ளார் – அமைச்சர் பொன்முடி
சென்னையில் அமைச்சர் பொன்முடி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சங்கரய்யாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து, நாளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகம் பரிந்துரைத்த பின்பும் ஆளுநர் ஒப்புதல் ஒப்புதல் வழங்காத நிலையில், அமைச்சர் பொன் முடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதைவிட மோசமான ஆளுநர் இருந்தது இல்லை. சங்கரையா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்திருக்க வேண்டும் சங்கரய்யா அவர்கள் நாட்டுக்காக போராடி பலமுறை சிறை சென்றவர். தமிழகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை உள்ளவர் போல பேசிய ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை.
திமுகவின் பயம் இனி எப்போதும் தொடரும் – அண்ணாமலை
வரலாறு தெரியாமல் ஆளுநர் பேசி வருகிறார் என்பது உறுதியாகி உள்ளது. கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஆளுநர் ஏன் மறுக்கிறார். ஆர்எஸ்எஸ் காரர்களுக்கு சுந்தரப் போராட்ட வீரர்கள் மீதெல்லாம் மரியாதை இல்லை. அதிலிருந்து வந்தவர் என்பதால் தான் ஆளுநர் வெறித்தனத்தோடு செயல்படுகிறார்.
தினமும் பொய் பேசுவதையே ஆழ்ந்த தன் தொழிலாக கொண்டுள்ளார். பாஜக, ஆர்எஸ்எஸ்க்கு ஆதரவாக ஆளுநர் செயல்படுவது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. சுதந்திர போராட்ட வீரர்களுக்கு திராவிடம் மாடல் அரசு தான் உண்மையாக மரியாதை அளிக்கிறது. அமைச்சரவை சொல்வதை செய்வது தான் ஆளுநரின் வேலை. மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
ஆளுநர் அவர்களே நீங்கள் தேர்தலில் நின்று, ஜெயித்து வந்த பின், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிஜேபி கருத்துக்களை பேசுங்கள். உண்மைக்கு புறம்பான பல்வேறு செய்திகளை கூறி, இந்த ஆட்சியின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை நாட்டுமக்கள் புரிந்து வைத்துள்ளனர். ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் என்னை பேச விடுவதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.