தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன் மாணிக்கவேல் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் ஓய்வு பெற்றாா். இதைத்தொடர்ந்து சென்னை உயா்நீதி மன்றத்தால் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் பொன்மாணிக்கவேல் பதவிகாலம் நவம்பா் 30-ம் தேதி உடன் முடிந்த நிலையில் சிலை கடத்தல் வழக்குத் தொடா்பான ஆவணங்கள் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு பொன்மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது.
அதற்கு பதிலளித்த பொன்மாணிக்கவேல் எனது பதவி தொடா்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே நீதிமன்றம் தான் என்னை நியமித்தது நீதிமன்றம் உத்திராவிட்டால் ஆவணங்களை ஒப்படைப்பேன் என கூறினார்.
இந்நிலையில் இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சிலை கடத்தல் வழக்குத் தொடா்பான ஆவணங்களை உயா் அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
ஆனால் பொன்மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்களைத் தொகுக்கும் பணி நடைபெறுகிறது. பணி முடிவடைந்ததும் ஆவணங்கள் விரைவில் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து சமீபத்தில் பொன் மாணிக்கவேல் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் பொன்.மாணிக்கவேல் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…