விழுப்புரம் அருகே உள்ள வழுரெட்டி பகுதியை சார்ந்த ஜெயப்பிரதா இவர் கடந்த 2013-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி கிராமத்தை சார்ந்த சுரேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு வீட்டை விட்டு சென்ற சுரேஷ் வீடு திரும்பததால் ஜெயப்பிரதா மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து பல இடத்தில் தேடியும் சுரேஷ் கிடைக்கவில்லை.இதனால் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
மூன்று ஆண்டுகளாக போலீசார் தேடியும் சுரேஷ் கிடைக்கவில்லை.இந்நிலையில் சமீபத்தில் டிக் டாக் வீடியோவில் காணாமல் போன சுரேஷ் போல ஒரு நபர் திருநங்கை உடன் வீடியோவில் இருப்பதை பார்த்த ஜெயப்பிரதா உறவினர்கள் அந்த விடியோவை ஜெயப்பிரதாவிடம் காண்பித்தனர்.
இதில் இருப்பது எனது கணவன் தான் என ஜெயப்பிரதா கூற இதனை தொடர்ந்து விழுப்புரம் திருநங்கை அமைப்பு சார்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த திருநங்கை ஓசூரில் இருப்பதாக கூறினார்.
இந்நிலையில் ஓசூரில் சென்று விசாரணை செய்த போலீசார் அந்த திருநங்கையுடன் சுரேஷ் திருமணம் செய்து வாழ்ந்து வந்தாக தெரியவந்தது.பின்னர் சுரேஷை மீட்டு ஜெயப் பிரதாவிடம் ஒப்படைத்தனர். ஓசூரில் சுரேஷ் தனியார் டிராக்டர் கம்பெனியில் வேலை செய்து வந்த போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…